
உலகில் ஒரே சாதிதான் உள்ளதாகவும், அது மனித சாதிதான் என்றும் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தின் புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமரின் வருகை இந்த நூற்றாண்டு விழாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
மக்களுக்குத் தொண்டாற்றுவதே இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும் என்று சாய்பாபா கூறியுள்ளதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார். பொருளுள்ள பயனுள்ள ஆன்மீக வாழ்வுக்கு ஒழுக்கம், ஒப்படைப்பு, பக்தி, தீர்மானம், பாகுபாடின்மை ஆகியன தேவை என்று சாய்பாபா கூறுவதாகக் குறிப்பிட்டார்.
உலகில் உள்ள ஒரேசாதி மனித சாதிதான் என்றும், உலகில் ஒரே மதம் அன்பு தான் என்றும் ஐஸ்வர்யா ராய் கூறினார். உலகின் ஒரே மொழி நெஞ்சம் தான் என்றும், ஒரே கடவுள் எங்கும் நிறைந்துள்ளதாகவும் ஐஸ்வர்யா ராய் பேசினார்.


