
இஸ்ரேல் தொடர்பான அனைத்துக் கப்பல்களையும் குறிவைத்துத் தாக்கப்போவதாக ஹவுதிக்கள் அறிவித்துள்ளதாக எருசலேம் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நாட்டுக் கப்பல், எந்த நாட்டுக்குச் செல்கிறது என்பதைக் கருத்திற் கொள்ளாமல் இஸ்ரேலுடன் வணிகம் செய்யும் எந்தவொரு கப்பபலையும் தங்கள் அமைப்பு குறிவைத்துத் தாக்கும் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியை இஸ்ரேலில் இருந்து வெளியாகும் எருசலேம் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும் ஹவுதிக்கள் அறிவித்துள்ளனர். தங்கள் தாக்குதலில் இருந்து தப்ப வேண்டுமென்றால் கப்பல்கள் இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்வதையோ, அங்கிருந்து வருவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் பதற்றத்தைத் தணிக்க வேண்டு என்று விரும்புவோர் அங்குத் தாக்குதல்கள் நடத்துவதையும், முற்றுகையையும் இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக ஹவுதிக்கள் அறிவித்துள்ளனர்.


