
ஊர்ப்புறங்களே நாட்டின் முதுகெலும்பு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்றங்களில் குறைந்தது ஆண்டுக்கு ஆறுமுறை கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்கள், பொதுமக்களிடம் கருத்துக்கள் குறைகளைக் கேட்டறிய வேண்டும்.
ஊராட்சிகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும் என்று பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் விதிமுறை உள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு ஊர்ப்புறங்களே என்று கூறிய காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளில் ஆண்டுதோறும் ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று ஊராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றினார்.
அதில் நாட்டின் முதுகெலும்பாக ஊர்ப்புறங்களே உள்ளதாகத் தெரிவித்தார். ஊராட்சிகளின் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
