
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான, ம. பொ. சிவஞானம் நினைவு நாளையொட்டி அண்ணாமலை புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட, ஐயா ம. பொ. சிவஞானத்தின் போராட்டமே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வரலாற்றிலேயே முதன்முறையாகச் சிலப்பதிகார மாநாடு நடத்திச் சிலம்புச் செல்வர் என்ற புகழ் பெற்றதையும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் உள்ளவரை ஐயா ம. பொ. சிவஞானத்தின் புகழ் நிலைத்திருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
