சுழல் 2 – இசையைச் செதுக்கிவிட்ட சாம் சி.எஸ். !

Advertisements

விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட முதல் வெப் தொடர் ‘சுழல்-தி வோர்டெக்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில் கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடருக்கான இசையைச் சாம் சி.எஸ். அமைத்துள்ளார். 2022-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் பாகமாக ‘சுழல் 2 தி வோர்டெக்’ உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த வெப் தொடர் வருகிற 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொடர் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *