பற்றி எரிந்த ஈபிள் டவர்.. மளமளவென பரவிய தீ..!

Advertisements

பாரிஸ்:

இந்திய நேரப்படி நேற்று இரவு பாரிஸில் உள்ள ஈபிள் டவரின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் தீப்பிடித்தன. சரியாக 2025ம் வருடம் தொடங்கும் நேரத்தில் இப்படியொரு விபத்து ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

ஈபிள் டவரின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் உள்ள லிஃப்ட் கம்பிகளில் ஒன்றில் தீப்பிடித்ததால்… அந்த டவர் முழுக்க தீப்பரவியது. மொத்த டவரும் பற்றி எரியும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கே தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து 1,200 சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். லிப்ட் ஷாஃப்டில் அதிக வெப்பம் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கே உள்ள கேபிள் முதலில் வெப்பம் காரணமாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் கேபிள் முதலில் தீப்பிடித்தது. அது அப்படியே பரவி மொத்தமாக டவர் முழுக்க தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மொத்த கோபுரமும் இதனால் தீயால் படர்ந்தது. இந்தக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சம்பவத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் 4-5 மணி நேரங்கள் கழித்தே தீ அணைக்கப்பட்டது. ஈபிள் கோபுரம் தினமும் சுமார் 25,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சரியாக 2025ம் வருடம் தொடங்கும் நேரத்தில் இப்படியொரு விபத்து ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சமீபத்திய தீ விபத்துச் சம்பவம் ஈபிள் டவரின் டிவி கட்டுப்பாட்டு அறையில் 1956 இல் ஏற்பட்ட தீவிபத்தை போலவே இருப்பதாகப் பலரும் தெரிவிக்கின்றனர். 1956ல் ஏற்பட்ட தீ விபத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஈபிள் டவரை பழுதுபார்க்க ஒரு வருடம் தேவைப்பட்டது.

அதன்பின் 2 முறை இதேபோல் ஈபிள் கோபுரத்தில் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. மொத்த டவரும் பற்றி எரியும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் இதன் காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.

இந்தச் சம்பவத்தால் பார்வையாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கோபுரம் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும், ஆனால் இரண்டாவது மாடிக்கு மேல் மக்கள் செல்ல அனுமதி இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதற்கான காரணம்குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்துகுறித்து கருத்து தெரிவிக்க பாரீஸ் போலீசார் மறுத்துவிட்டனர்.

1889ல் இந்த டவர் திறக்கப்பட்டது. இது பிரான்சின் கலாச்சார சின்னமாகவும், உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது. இந்த ஈபிள் கோபுரம் 2022 இல் 5,889,000 பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. உலகிலேயே ஈபிள் கோபுரம் நுழைவுக் கட்டணத்துடன் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச்சின்னமாகும்: 6.91 மில்லியன் மக்கள் 2015ல் இதைப் பார்வையிட்டனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இந்த டவர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *