
சென்னை: நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியிருந்த நிலையில் அடுத்த 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் படத் தகவல்களைத் தாண்டி இப்போது அவரது ரசிகர்கள் கட்சிபற்றிய விவரங்களைத் தான் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
கடந்த மாதம் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெயர் அறிவித்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாகக் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான வாட்ஸ் ஆப், டெலிகிராம், இணையத்தளம் உள்ளிட்டவற்றிகான QR cord மற்றும் லிக்குகளை தவெக தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் அதிகாரப்பூர்வமான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.
குறிப்பாக மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய இந்த உறுப்பினர் சேர்க்கையானது 15 மணி நேரத்திற்குள் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணபித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், பலர் ஒரே சமயத்தில் விண்ணப்பித்துள்ளதால் பலருக்கு குறுஞ்செய்தியானது தாமதமாக அனுப்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறியிருந்தார்.


