
உதகமண்டலத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டைக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் அலுவல் முறைப்படி ஆளுநரே வேந்தராவார். இந்நிலையில் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர் என்று கூறிச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.

இதையடுத்துத் தனக்குள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி அந்ம மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஏப்ரல் 16ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பதிவாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உதகையில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டைக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடக்கி வைத்துள்ளார். இதில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.




