Tamil Nadu Congress: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

9 ஆண்டுகளில் நாடு பின்னோக்கி சென்றதில் இருந்து காப்பாற்ற ராகுல் காந்தி இந்த நாட்டிற்கு தேவை. பிஜேபியை வேரோடு அகற்ற வேண்டும் என இந்திய மக்கள் முடிவெடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் எடிசன்தெரிவித்துள்ளார்.

பாரத் ஜோடா நியாய் யாத்திரைக்காக அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்த தவறிய ஆளும் பாஜக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
பேய்குளம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் பிரபு தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்தும் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர் எடிசன் பேசுகையில்,ராகுல் காந்தி 4500 கி.மீ தூரம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்காக நடைபயணம் மேற்கொண்டு உள்ளார்.அவரது நடை பயணத்தின் போது விவசாயிகளும் தொழிலாளிகளும் பொதுமக்களும் பாஜக அரசு சால் நடைபெறும் அக்கிரமங்களை ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறி கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

ராகுல் காந்தியின் நடை பயணத்தால் கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.9 ஆண்டுகளில் இந்த நாடு பின்னோக்கி சென்றதில் இருந்து காப்பாற்ற ராகுல் காந்தி இந்த நாட்டிற்கு தேவை. பிஜேபியை வேரோடு அகற்ற வேண்டும் என இந்திய மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

பாஜகவினர் கடந்த 9 ஆண்டுகாலம் மதத்தாலும் ஜாதியினாலும் மக்களை பிரித்துப் பார்க்கின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிப்பதற்கு முன்பாகவே திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கோவிலை திறக்க வேண்டும் என்பதற்காக திறந்து உள்ளனர். இதன்மூலம் 2 மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது.காங்கிரஸ் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது பாஜக மிஷின்களை நம்பி உள்ளது. என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *