
புதிய கல்விகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.இதில் ஐகோர்ட் தலைமை நீதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோருக்கு மாணவர்கள் தபால் அனுப்பினர்.
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பேரணி, ஐகோர்ட் நீதிபதிக்குத் தபால் அனுப்பும் போராட்டம் இன்று நடந்தது.காமராஜர் சிலை சந்திப்பில் தொடங்கிய பேரணிக்கு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தமிழரசன், தலைவர் பிரவீன்பிர்லா தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ஷிஷாந்த், தமிழ்மணி, மணிகண்டன், கவுதம் முன்னிலை வகித்தனர். பேரணியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகளின் வழியாகத் தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். பின்னர் தேசிய கல்வி கொள்கையால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.
எனவே அவசரகதியில் தேசிய கல்வி கொள்கையைப் புதுவையில் திணிக்கக் கூடாது என வலியுறுத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோருக்கு மாணவர்கள் தபால் அனுப்பினர்.

