Roscosmos: ரஷிய விண்வெளி மையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக மாணவர்கள்!

Advertisements

ரஷிய விண்வெளி மையத்தைப் பார்வையிட முதல் கட்டமாக 50 மாணவ-மாணவிகள் 10 ஆசிரியர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம்மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

சென்னை: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஆன்லைன் மூலமாக ஏவுதள அறிவியல் பயிற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 300 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு 4-வது கட்டமாகக் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தைப் பார்வையிட இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 4 மாணவர்களுக்கு ரஷிய விண்வெளி மையத்தைப் பார்வையிட நிதியுதவி கிடைக்க பெற்ற நிலையில் 2 மாணவர்களுக்கு நிதி இல்லாததால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டபோது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி மையத்தைப் பார்வையிட முதல் கட்டமாக 50 மாணவ-மாணவிகள் 10 ஆசிரியர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம்மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

மாணவ-மாணவிகளுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்துச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் பல்லாவரம் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *