
தேவசம் வாரியம் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், ஐயப்பன் கோவில் கூரைத் தங்கத் தகடுகள் காணாமல் போன விவகாரத்தில் தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் கோவில் கருவறைக் கூரைத் தகடுகள் காணாமல் போன விவகாரம் குறித்துக் கேரள அமைச்சர் சிவன்குட்டி செய்தியாளரிடம் பேசினார். அப்போது, தேவசம் வாரியம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்றும், அந்த வாரியத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையை மட்டுமே அரசு பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
தேவசம் வாரியத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உயர் நீதிமன்றம் நியமித்த மூத்த அதிகாரியால் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தங்கத் தகடுகள் காணாமல் போன விவகாரத்தில் யார் தவறிழைத்திருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவன்குட்டி தெரிவித்தார்



