
தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தோ்தல் ஆணையம் தொடங்குகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக தலைமை தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் 2002 மற்றும் 2005 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி வாக்காளா் கணக்கெடுப்புப் பணி இன்று முதல் தொடங்குகிறது.
தொடர்ந்து, உரிய ஆவணங்களைக் காட்டி டிசம்பா் 9 ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறலாம். பின்னர், முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாது என கூறினார்.
தொடர்ந்து அவர், முகவரி மாறியவா்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர், 7 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் சமா்ப்பித்து, 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும். மேலும், இறுதி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை இடம்பெறச் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.


