
தமிழ்நாட்டின் வடக்கெல்லைப் போராட்டத் தலைவரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் நினைவுநாளையொட்டி பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், குடும்பத்தின் வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனாலும், தன்னுடைய சொந்த முயற்சியால் தமிழ் இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்ததுடன், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தவர் ம.பொ.சிவஞானம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலாரும் பாரதியும்’, ‘எங்கள் கவி பாரதி’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், மதராஸ் மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ம.பொ.சிவஞானம் என்று நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
