
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் ஆலயத்தில் 97ஆம் ஆண்டு செடல் உற்சவம் மற்றும் திருத்தேர் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது, விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 97 ஆம் ஆண்டு செடல் மற்றும் திருத்தேர் உற்சவம் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விழா நடத்துவது வழக்கம் இந்த நிலையில் அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி வந்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான செடல் போடுதல் மற்றும் அம்மன் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.
முன்னதாகக் காலைச் சக்தி கரகம் கொண்டு கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று பின்னர் ஸ்ரீ முத்தாலம்மன் திருத்தேரில் புஷ்ப மலர் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேரில் எழுந்தருளிய முத்தாலம்மன் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
இத்தேர் திருவிழாவின்போது எந்த வித ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவைக் கான சுற்று வட்டார பகுதியிலிருந்து பக்தர்கள் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


