
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வருகிறது.
தில்லியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்து டிக்ளெர் செய்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்கள் எடுத்து ஆல் ஆவுட் ஆனது.
எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது.
இதில், ஜான் காம்ப்பெல் 87 ரன்களும், ஷாய் ஹோப் 66 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
இன்னும் இந்திய வெற்றிப்பெற எட்டு விக்கெட்களே மீதமுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.



