Savukku Shankar: திடீரென அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்..பரபரபத்த கரூர் நீதிமன்றம்!

Advertisements

பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தமிழக பெண் காவலர்கள்குறித்து யூடியூப் சேனலில் மிகவும் தரக்குறைவான வகையில் கருத்து தெரிவித்ததற்காகப் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியில், கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது நடவடிக்கையின்போது தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகத் தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து கோவை மத்திய சிறையிலிருந்து மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் அளித்த புகார், தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரென அடுத்தடுத்து ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உரிய போலீஸ் பாதுகாப்பு உடன் கரூர் நீதிமன்றத்திற்கு இன்று காலை 11.15 மணிக்குப் போலீசார் அழைத்து வந்துள்ளனர். இதனால் கரூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *