Russia Ukraine war :பயங்கர தாக்குதல்.. 41 பேர் பலி.. 180 பேர் காயம்!

Advertisements

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். 180 பேர் காயம் அடைந்தனர்

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் குறைந்தது 41 பேர் பலியாயினர். 180 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது. என்றார். இதற்கிடையே, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது, இது ‘காட்டுமிராண்டித்தனமான’ செயல் என்று கூறி உள்ளது.

கடந்த பிப்.,24 2022-ம் தேதி துவங்கிய ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக நீட்டித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *