
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள நூறு ரூபாய் நாணயத்தை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் நாக்பூரில் கேசவ பலிராம் ஹெட்கேவார் என்பவரால் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா தில்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அஞ்சல் தலையையும், பாரத மாதா உருவப்படம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி அதன் தொண்டு, ஒற்றுமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைச் சிறப்பிக்கும் வகையில் நூறு ரூபாய் நாணயங்களை அரசு வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா நாணயச்சாலையில் உள்ள இந்த நாணயங்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
