
சென்னை அண்ணாசாலையில் கார் ரேஸில் ஈடுபட்டு 3 பேரை அடித்துத் தூக்கிய சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகனைப் போலீஸார் கைது செய்தனர்.
அந்த வகையில், சென்னையில் நேற்று நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மவுண்ட் ரோடு என அழைக்கப்படும் அண்ணாசாலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் மூன்று சொகுசு கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்துள்ளன. ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொண்டு வந்த அந்தக் கார்களில் ஒரு BMW சொகுசு கார், டிஎம்எஸ் பகுதியில் உள்ள சாலை தடுப்பில் வேகமாக மோதிக் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
இதில் அந்த வழியாகச் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள்மீது அந்தக் கார் வேகமாக மோதி அடித்துத் தூக்கியது. கார் மோதியவர்கள் தூக்கி வீசப்பட்டனர். பின்னர், அந்தக் கார் அங்குள்ள பிளாட்பார்ம் கம்பியில் மோதி நின்றது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், காயமடைநதவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள்ளாக, காரை ஓட்டி வந்தவர் தப்பியோடினார்.
இதையடுத்து, போலீஸார் அங்கு வந்த விசாரணை நடத்தியதில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சபாபதியின் மகன் யோகேஷ் ரத்தினம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடி யோகேஷ் ரத்தினத்தை தேடி வந்தனர்.இந்தநிலையில்சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சபாபதியின் மகன் யோகேஷ் ரத்தினத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.


