Renting Own Vehicle: சொந்த வாகனத்தை வாடகைக்கு விட்டால் அபராதம்!

Advertisements

சென்னை: ‘சொந்த உபயோகத்திற்கு வாங்கப்படும் வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை, ‘டூரிஸ்ட் பர்மிட்’ பெறாமல், சவாரியாகப் பதிவு செய்து இயக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமான புகார்கள் வருகின்றன.

இந்தநிலையில் தமிழக போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை, ‘டூரிஸ்ட் பர்மிட்’ பெறாமல், சவாரியாகப் பதிவு செய்து இயக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமான புகார்கள் வருகின்றன.

சொந்த வாகனங்களை, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், எளிமையாக்கப்பட்டு உள்ளன. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலேயே, டூரிஸ்ட் உபயோகத்திற்கான, ‘டி-போர்ட் பர்மிட்’ வழங்கப்படுகிறது.

இதைமீறி, முறையான டூரிஸ்ட் பர்மிட் பெறாமல், சொந்த வாகனங்களை விதிகளை மீறிப் பயன்படுத்தப்படுவதை தடுக்க, மாநிலம் முழுதும் ஐந்து நாட்கள் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.

மொத்தம், 5,273 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில், 155 வாகனங்கள் விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. 121 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதம் மற்றும் விதியாக, 18 லட்சத்து, 53,051 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *