Ratha Saptami Festival: ரத சப்தமி விழாவைக் காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

Advertisements

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.

ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாளைக் காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவுவரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

அதன்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணிவரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணிவரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணிவரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணிவரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

மாலை 4 மணி முதல் 5 மணிவரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணிவரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணிவரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார்.

ரதசப்தமி விழாவைக் காண இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *