Rape: மதுபோதையில் பெண்ணைத் தூக்கி சென்று கற்பழித்த வாலிபர்!

மது போதையில் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வரதராஜா லே-அவுட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நிர்வாண நிலையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. இதுபற்றி அறிந்ததும் அம்ருதஹள்ளி போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்தப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தது உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. கடந்த 2-ந் தேதி வரதராஜா லே-அவுட் அருகே உள்ள மதுக்கடையில் வாலிபர் மதுகுடித்து உள்ளார். அப்போது அந்தப் பெண்ணும் கடைக்கு வந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பெண் தனியாகச் செல்வதை அறிந்த அந்த வாலிபர், அப்பெண்ணை கட்டிடத்திற்குள் தூக்கி சென்று கற்பழித்ததுடன், கழுத்தை நெரித்தும், அவரை அடித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. குடிபோதையில் அந்த வாலிபர் வெறிச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. வாலிபரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *