
Rajinikanth | C. P. Radhakrishnan
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், வியாசர் குகை, உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அத்துடன் மஹா அவதார் பாபா குகைக்குச் செல்வதற்காகப் போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணிநேரம் ரஜினிகாந்த் மலை ஏறிய புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அத்துடன் அவரது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


