Advertisements

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், விடுதலை பெற்ற இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான இராஜகோபாலாச்சாரியின் மார்பளவுச் சிலையைத் திரௌபதி முர்மு திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
தில்லியில் அண்மையில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அடிமை இந்தியாவின் அடையாளங்களுக்குப் பதில், விடுதலை பெற்ற இந்தியாவின் அடையாளங்கள் எழ வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன்படி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோக மண்டபத்தில் இருந்த எட்வின் லுட்யன்ஸ் சிலை அகற்றப்பட்டு, அதற்குப் பதில் விடுதலை இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான இராஜகோபாலாச்சாரியின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் செகாவத், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் இராஜகோபாலாச்சாரியின் வழிவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.ஆர்.கேசவன் தனது மனைவி, மகள் ஆகியோருடன் கலந்துகொண்டு தனது முன்னோருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisements



