விஜயை சந்தித்த ராகுல் தூதுவர்:தமிழக காங்கிரசில் அதிர்ச்சி..!

Advertisements

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியிழந்து 58 ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பிறகு கூட தமிழக அரசியில் பங்குகொள்ள திமுக வாய்ப்பும் அளிக்கவில்லை. அப்படியிருந்தும் ஒரு சமயம் காங்கிரஸ் துணையுடன்தான் திமுக ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வராகயிருந்த கருணாநிதி காங்கிரசை ஆட்சியில் பங்குகொள்ள வாய்ப்பே அளிக்கவில்லை. அதே சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது அதில் திமுக பங்கு கொண்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் துணையில்லாமல் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது. காரணம் காங்கிரசால் சிறுபான்மை வாக்கான 14 சதவிகிதம் சுளையாக அப்படியே தி.மு.கவுக்கு கிடைக்க செய்கிறது. இப்போது விஜயால் சிறுபான்மை ஓட்டுகளில் ஓட்டைபோடுக்கிறார். அது தி.மு.கவுக்கு வேட்டாகிறது. அதே சமயம் தமிழக காங்கிரசியில் இருக்கிறவர்கள் காங்கிரசை வளர்க்க வேண்டும் ஆசைப் படுக்கிறார்கள்.

அதனால் விஜயோடு கூட்டணி அமைக்க ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவத்தி அதற்கான முன்னேடுப்பு எடுக்கிறார். இதை தமிழக காங்கிரசில் இருப்பவர்கள் சிலர் மூட்டு கட்டை போடுக்கிறார்கள். மத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைத்துள்ளது. இந்த குழு திமுகவுடன் கூட்டணி அமைக்கதான் மட்டும்தான் என்கிறார்கள். அப்படி என்றால் கட்சியுடன் தான் இருக்கவேண்டும். ஆனால் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்ததை என்று மத்திய காங்கிரஸ் சொல்லிருக்கிறது.

அப்படியிருக்க த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசிய, மத்திய காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவு கோஷ்டி தலைவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் கட்சியில், கூட்டணி குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, சென்னை அறிவாலயத்தில், கடந்த டிசம்பர் 3ம் தேதி, தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்தது. அப்போது, ஆட்சியில் பங்கு; காங்கிரசுக்கு 39 தொகுதிகள்; இது குறித்து டிசம்பர்., 20ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட ஐவர் குழு தெரிவித்தது.

அதற்கு, இது குறித்து ராகுலிடம் பேசிக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். இதை, கிரிஷ் சோடங்கர், ராகுலிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜயை, சென்னையில் அவரது இல்லத்தில், காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து, தவெ.க., -காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேசினார்.அப்போது, 125 தொகுதிகளின் பட்டியலை விஜயிடம் வழங்கி, அதிலிருந்து 75 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கும்படி, பிரவீன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரை விஜயிடம் அனுப்பியது ராகுல் தான் என, தமிழக காங்கிரசில் உள்ள விஜய் ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால், இந்தச் சந்திப்பு குறித்து ராகுலுக்கு தெரியாது என, தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

விஜயை சந்திக்கும் முன், பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில், மற்ற கட்சிகள், கட்சி நிகழ்ச்சிக்கும் பேரணிக்கும் ஆட்களை திரட்ட வேண்டி இருக்கிறது. த.வெ.க., நிலைமை, நேர்மாறாக இருக்கிறது. அதிக கூட்டம் கூடுவதால், அதை குறைப்பதே அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.த.வெ .க.,வை, பிரவீன் சக்கரவர்த்தி இப்படி பாராட்டியதை தி.மு.க., தலைமை விரும்பவில்லை. மேலும், விஜயை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது தொடர்பாக, தமிழக காங்கிரஸ்., தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது. இண்டி கூட்டணி இரும்புக் கோட்டையாக உள்ளது. எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம், என்றார்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ்., வட்டாரங்கள்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சிலர், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களின் வாரிசுகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் வாங்க விரும்புகின்றனர். சிலர், ஆளுங்கட்சியிடம், தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துள்ளதால், தி.மு.க, கூட்டணியில் நீடிக்க விரும்புகின்றனர்.ஆனால், தமிழக காங்கிரசியில் இருக்கிற பெரும்பான்மையான நிர்வாகிகள், தொண்டர்கள், தி.மு.க., கூட்டணி வேண்டாம் த.வெ.க,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர். பிரவீன் சக்கரவர்த்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு கருதுகிறது.

இந்த சமயத்தில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவது குறித்தும், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணியை தொடரலாம் என தெரிவிப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரசில் இருக்கும் தி.மு.க, ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர், டில்லி மேலிடத்தில், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தி வருகின்றனர்.பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் தொடரும். இல்லாவிட்டால், த.வெ.க., – காங்கிரஸ் கூட்டணி மலரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டிவி விவாதங்களிலும், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆனால், பிரவீன் மீது, டில்லி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்த விஷயத்தில் அமைதி காக்கிறது.இதையடுத்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், காங்கிரஸ்., கோஷ்டி தலைவர்கள் குறித்து, விஜய் கூட்டணியை விரும்பும் அக்கட்சியின் கோஷ்டி தலைவர்கள், தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரசில், முக்கிய பதவி வகிப்பவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலின், அரசியல் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி மீது எப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.அதற்கு, கிரிஷ் ஷோடங்கர், பொறுமையாக இருங்கள். தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு குறித்த முடிவை, தி.மு.க., டிசம்பர் 20ம் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பிரவீன் சக்கரவர்த்தி தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ஒரு கேலி சித்திரத்துடன், பன்றிகளுடன் ஒரு போதும் மல்லுக்கட்ட வேண்டாம். நீங்கள் இருவரும் சேறாவீர்கள். ஆனால், பன்றி அதை விரும்பும் என, ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியதை பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவு காங்கிரஸ் கட்சியில், விவாதப் பொருளானது. அவர் நம்மை சுட்டிக் காட்டுகிறாரோ என்ற குழப்பம், தி.மு.க., கூட்டணியை விரும்பும் தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களுக்கு உருவாகி உள்ளது.இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பிரவீன் சக்கரவர்த்தியை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள், டில்லிக்கு வலியுறுத்திய தகவல், அவருக்கு தெரிய வந்ததால், தன்னை எதிர்ப்பவர்களை பன்றிகள் என, மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அவருக்கு ராகுல் ஆதரவு இருப்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க காங்ங்கிரஸ்., தலைமை விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் தொடர்பாக, விஜய்க்கு ராகுல் ஆறுதல் தெரிவித்தார். அதற்காக, ராகுல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா. விஜய், பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு முழுக்க, முழுக்க ராகுல் கண் அசைவுப்படி தான் நடந்துள்ளது. இதைத்தான், காங்கிரசில் இருப்போரும் தி.மு.க.,வினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.உண்மையில் தி.மு.க. கூட்டணிலிருந்து காங்கிரஸ் விலகினால் ஸ்டாலினுக்கு தோல்வி நிச்சயம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *