
பாராளுமன்ற தேர்தலில் அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்ததை போல் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலிலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இதன் பின்னர், அலுவலக வாயிலில் இருந்த கலைஞர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தங்களை திமுக.வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்பார். இதை யடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசியபோது, கேரள மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் திமுக முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது என்றார். புதிதாக திமுகவில் இணைத்து கொண்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் இயக்கத்தில் திறம்பட செயல்படுவார்கள் என நம்புவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, பாராளுமன்ற தேர்தலில் அயோத்தி தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்ததை போல் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலிலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்தார்.



