புயல் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரியில் 10 இடங்களில் நடைபெற்றது.
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பில், புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியத்திலும், ஒரே நேரத்தில் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை, புயல் மற்றும் புயலால் துண்டாடப்பட்ட பேரிடர்கள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்தப் பேரிடர் ஒத்திகையில் கடலோர காவல் படை ஒருங்கிணைப்புடன் சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளும் பங்கேற்றுள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி துறைமுகம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, காலப்பட்டு, ஒதியம்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்றது.இது ஒத்திகை நிகழ்ச்சி மட்டுமே எனவே பொதுமக்கள் தேவையற்ற பீதிக்கு ஆளாக வேண்டியதில்லையெனப் புதுச்சேரி அரசு சார்பில் பொதுமக்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.புயல் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரியில் 10 இடங்களில் நடைபெற்றது.
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பில், புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியத்திலும், ஒரே நேரத்தில் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை, புயல் மற்றும் புயலால் துண்டாடப்பட்ட பேரிடர்கள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்தப் பேரிடர் ஒத்திகையில் கடலோர காவல் படை ஒருங்கிணைப்புடன் சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளும் பங்கேற்றுள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி துறைமுகம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, காலப்பட்டு, ஒதியம்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்றது.இது ஒத்திகை நிகழ்ச்சி மட்டுமே எனவே பொதுமக்கள் தேவையற்ற பீதிக்கு ஆளாக வேண்டியதில்லையெனப் புதுச்சேரி அரசு சார்பில் பொதுமக்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.