
சுண்ணாம்பாற்றின் வலது கரையோரம் 800 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.69 கோடி மதிப்பில் கிராவல் மண் கொண்டு தடுப்பு கரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று அப்பகுதியில் நடைபெற்றது.இந்தப் பூமி பூஜை நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலும் சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி என் ஆர் நகர் பகுதி மழைக்காலங்களில் சுண்ணாம்பு ஆற்று வெள்ள நீர் புகுந்து அங்கு வசிக்கும் மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம், முதலமைச்சர் மற்றும்பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர் கோரிக்கை வைத்து அதன் நடவடிக்கையாகச் சுண்ணாம்பாற்றின் வலது கரையோரங்களை பலப்படுத்தி வெள்ள தடுப்பு சுவர் அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி என் ஆர் நகர் பகுதியில் சுண்ணாம்பாற்றின் வலது கரையோரம் 800 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.69 கோடி மதிப்பில் கிராவல் மண் கொண்டு தடுப்பு கரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று அப்பகுதியில் நடைபெற்றது.
இந்தப் பூமி பூஜை நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலும் சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையிலும் நடைபெற்றது.


