Puducherry:தொடர்நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கல்!

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தொடர்நோய் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூபாய் 3000 ஆயிரம் உதவித் தொகைக்கான ஆணையினை திமுக துணை அமைப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார்!

புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்குப் புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலம் தொடர் நோய் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைப்பெற்றது..

இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில கழக துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி அவர்கள் கலந்து கொண்டு, தொடர் நோய் பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை தலா ரூபாய் 3000 ஆயிரம் வீதம் மூன்று மாதத்திற்கான உதவித் தொகையினை 14 கு பயனாளிகளுக்கு மொத்தம் ரூபாய் 9000 ஆயிரம் வீதமும் ஒரு பயனாளிக்கு மட்டும் நான்கு மாத உதவித்தொகை மொத்தம் ரூபாய் 12,000 ஆயிரம் உதவித் தொகைக்கான அரசாணையினை பாதிக்கப்பட்டபயனாளிகளுக்கு வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் நிசார், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், கிளை செயலாளர்கள் செல்வம், இருதயராஜ், அலெக்ஸ், ராகேஷ், கழக சகோதரர்கள் வேளாங்கன்னி, மோரிஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *