Advertisements

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின், கிழக்கு மாவட்டத்திற்கான கட்சி அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத்திற்கான அலுவலகம், முத்துமாரியம்மன் கோவில் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சட்டமன்ற கட்சி;த் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்று, புதியதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன், செய்திருந்தார். விழாவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள், ஜெரால்டு மற்றும் ராஜமோகன், நிர்வாகிகள் சாமிநாதன், இளையராஜா, குமரன், இராஜாராம், வேல்முருகன், ஆறுமுகம், ரமேஷ், லட்சுமணன், பஞ்சகாந்தி, ரவி உடையார், வழக்கறிஞர்கள் சாமிநாதன், நிஜாம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Advertisements




