Prawn Culture: லாபம் தரும் இறால் வளர்ப்பு!

Advertisements

கடல் உணவுகள் என்றால்  நிறைய பேருக்கு அலாதி பிரியம். கடலில் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. கடல் இறால் என்றால் தனி சுவையாக இருக்கும். இதனை தனியாக வளர்க்கின்றனர்.

இறால் மீன் பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும்.

கடலில் உள்ள கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. அதனால் இறாலை “கடலின் தூய்மையாளர்” என்றும் அழைக்கின்றனர். இறாலானது ஆழ்கடல் பகுதியில் தான் முட்டையிடுகின்றன.

இதில் அதிகமாக கால்சியம் அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது.

கடற்கரையோரம் உப்பு நீரில் இறால் வளர்ப்பு என்பது பரவலாக பல இடங்களில் நடைப்பெற்றுவருகிறது.

இறால் மீன் இருப்பு வைத்தல்;

தனியார் மற்றும் அரசு இறால் மீன்(prawn farming) பொறுப்பகங்களிலிருந்து நன்னீர் இறாலை பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம்.

பராமரிப்பு;

இருப்பு செய்தபின் குள நீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்(oxygen), கார அமிலத்தன்மை(Alkaline acidity) மற்றும் உயிரினங்களின் உற்பத்தியை கண்காணிக்க வேண்டும்.

வெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன்(oxygen) 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால் மீன்(prawn in tamil) நன்றாக வளரும்.

உணவு;

ஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவை தாராளமாய் கொடுக்கலாம். இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமை புண்ணாக்கு, மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். நீலகால் இறால் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும்.

வருமானம்;

ஒரு எக்டரில் (நீர்பரப்பு) நிலம், நீர், காற்றூட்டி இயந்திரம், மின் இணைப்பு, தங்கும் அறை வரை பொருளாதாரம் செலவு சுமார் 2 லட்சம் ஆகும். அதோடு செயல்முறை செலவுகள் இறால் மீன் விலை, தீவனம், உரம் மற்றும் மற்ற செலவுகள் 3 லட்சம் ஆகும்.
இதில் நிகர லாபம் 3.5 லட்சம் வரை கிடைக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *