Combine Harvester: கூட்டு அறுவடை இயந்திரம்!

Advertisements

இது மூன்று அறுவடைச் செயல்முறைகளைக் கூட்டாக ஒருங்கே செய்கிறது. அவையாவன,கதிர் அறுத்தல், கதிரடித்தல், காற்றில் தூற்றுதல் என்பனவாகும்.

தற்காலக் கூட்டு அறுவடை இயந்திரம் (combine harvester) என்பது பலவகைக் கூலக் கதிர்களைத் திறம்பட அறுவடை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கதிர் அறுத்தல், கதிரடித்தல், தூற்றுதல் ஆகிய தனித்தனி பணிகளைக் கூட்டாக செய்வதால் இப்பெயர்பெற்றது. இந்த எந்திரம் கோதுமை, ஓட்சு, புல்லரிசி, பார்லி, சோளம், மக்காச் சோளம் , சோயா அவரை, ஆளி (ஆமணக்கு), சூரியகாந்தி சனோலா எனப் பலவகைகளையும் அறுவடை செய்ய வல்லதாக உள்ளது.

கூட்டு அறுவடை எந்திரம் உழைப்பை மிச்சப்படுத்தும் புதிய புதுமைபுனைவுகளில் ஒன்றாகும். இது வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கையைக் கணிசமாக குறைக்கிறது.

வரலாறு;

ஸ்காட்லாந்தில் 1826 இல், பாட்ரிக் பெல் எனும் புதுமை முனைவாளர் ஓர் அறுவடை இயந்திரத்தை வடிவமைத்தார். ஆனால், அவர் அதற்குக் காப்புரிமம் ஏதும் விண்ணப்பித்துப் பெறவில்லை. இது கத்திரியால் அறுக்கும் கோட்பாட்டைப் பின்பற்றியது. இந்தக் கோட்பாடு இன்றும் நடைமுறையில் உள்ளது. பெல் இயந்திரத்தை  குதிரைகள் ஓட்டின.

இன்றும் அமெரிக்காவில் சில பெல் எந்திரங்கள் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில்1835 இல், கிராம் மூர் என்பவர் முதல் கூட்டு அறுவடை இயந்திரத்தை வடிவமைத்துக் கப்புரிமமும் பெற்றார். இது கதிர் அறுத்தல், கதிரடித்தல், தூற்றுதல் ஆகிய மூன்று பணிகளையும் கூட்டக செய்ய வல்லது . இவற்றின் முதல்வகைகள் குதிரை அல்லது கோவேறு கழுதை, எருதுகளால் ஒட்டப்பட்டுள்ளன.

HERCULES;

கிளாசு எனும் ஐரோப்பியக்  குழுமம் 1953-ல் ஒரு  கூட்டு அறுவடை எந்திரத்தை உருவாக்கி, எர்க்குலிஸ் என்ற பெயரில் வெளியிட்டது. இது நாளொன்றுக்கு 5 டன் கோதுமையை அறுவடை செய்ய வல்லது.  1960 களில் தானாகவே தூய்மை படுத்தும் மற்றும் சுழல்திரை , கதிர் அடித்தல் போன்ற செயல்கள் நடத்தப்பட்டு கூலமணிகள் பிரிந்தன.

1980 களில் கதிரடிப்புத் திறமையை அளக்கும் மின்னியல் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் புதிய கருவி நல்ல கூலமணி விளைச்சலைப் பெற வேகத்தையும் மற்ற அளபுருக்களையும் கட்டுபடுத்த வழிவகுத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *