Pooja Hegde: பாலிவுட்டில் பரபரப்பு!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை: துபாய் சென்றிருந்த பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு படங்கள் மூலம் அறிமுகமாகி, தமிழ், இந்தியிலும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. சமீபத்தில் அவர் துபாய்க்கு சென்றிருந்தார்.

அங்கு நடந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பூஜா கலந்துகொண்டார். அப்போது அவரது செல்போன் நம்பருக்கு மர்ம நபரின் மெசேஜ் வந்ததாகவும் அதில், சல்மான் கானின் படத்திலா நடிக்கிறாய்.

சீக்கிரமே உன்னை கொலை செய்வோம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி துபாயில் விசாரணை நடந்ததாகவும் தெரிகிறது. ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அதே போல் அவருடன் நடித்தவர்களுக்கும் மிரட்டல் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது பற்றி கேட்டபோது, எனக்கு எந்த மெசேஜும் வரவில்லை என பூஜா மழுப்பலாக பதில் அளித்தார். ஆனால், அவருக்கு வந்த மெசேஜ் உண்மைதான் என பாலிவுட்டில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *