தேசத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமக்கும் சந்திராயன் 3…….பிரதமர் மோடி பெருமிதம்…..

Advertisements

‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில், விண்கலத்தின் 25 அரை மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள, 2-வது ஏவுதளத்தில் இருந்து, சந்திராயன் 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

Advertisements

இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சந்திரயான்-3, இன்று தனது மூன்றாவது சந்திரப் பயணத்தை தொடங்குகிறது. சந்திரயான்-3 பணிக்கு வாழ்த்துக்கள் என்றும், தேசத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சந்திராயன் 3 விண்கலம் சுமந்து செல்வதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்திய விண்வெளித்துறையில் இன்றைய தினம் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும், விண்வெளித்துறையில் இந்தியா மிகவும் ஆழமான வரலாற்றை கொண்டுள்ளதாகவும், நிலவில் நீர் மூலக்கூறுகள் உள்ளதை சந்திராயன் 1 கண்டுபிடித்தது, உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *