
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புனித நீராடினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (5-ந்தேதி) பிரயாக்ராஜ் செல்கிறார்.
டெல்லியிலிருந்து விமான படைக்குச் சொந்தமான விமானத்தில் அவர் காலை 10.45 மணிக்குப் பிரயாக்ராஜ் செல்கிறார்.
பின்னர் படகுமூலம் ஏரியல் கோட் பகுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.
தலைநகர் டெல்லியில் நாளைச் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட இருக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புனித நீராடியபின் பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
