
டெல்லி:
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியாவுக்கு வந்துள்ள சூழலில் அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தார்.
அப்போது தனது உடலில் இந்திய டிஎன்ஏ தான் இருப்பதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கூறிய நிலையில், அதைக் கேட்டவுடன் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஒரு நொடி ஸ்டன் ஆகினர்.
பசிபிக் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு இந்தோனேசியா. 27 கோடி மக்களைக் கொண்ட இந்தோனேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல காலமாகவே நல்லுறவு இருந்து வருகிறது.
இந்தியா பயணம்:
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் குடியரசு தின விழா கொண்டாட்டத்திலும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இரு நாட்டு உறவு, வர்த்தகம் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த இரவு விருந்தில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றார்.
இந்திய டிஎன்ஏ:
அப்போதுதனக்கு இருப்பது “இந்திய டிஎன்ஏ” எனப் பிரபோவோ குறிப்பிட இதைக் கேட்டதும் குடியரசுத் தலைவர் முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஒரு நொடி ஸ்டன் ஆகிவிட்டார்.
ஏனென்றால் பிரபோவோ ஏதோ சீரியஸாக கூறுவது போல டக்கென இதைக் கூறிவிட்டார். இதனால் ஒரு நொடி ஸ்டன் ஆன தலைவர்கள், அதன் பிறகு வாய்விட்டுச் சிரித்தனர். இந்தியாவுடனான தனது பிணைப்புகுறித்துப் பேசும்போது பிரபோவோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இரவு விருந்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பேசுகையில், “சில வாரங்களுக்கு நான் எனது மரபணு வரிசை முறை சோதனை செய்தேன்.
எனது டிஎன்ஏவைுயும் டெஸ்டிற்கு அனுப்பினேன். அப்போது அவர்கள் எனக்கு இந்திய டிஎன்ஏ இருப்பதாகச் சொன்னார்கள். நான் இந்திய மியூசிக்கை கேட்டாலே டான்ஸ் ஆடத் தொடங்கிவிடுவேன்.
வலுவான பிணைப்பு:
இந்தியாவும் இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பண்டைக் கால நாகரீக இணைப்புகள் உள்ளன.
இப்போதும் கூட நமது மொழியின் முக்கியமான பகுதிகள் சமஸ்கிருதத்திலிருந்து தான் வருகிறது. இந்தோனேசிய மக்களின் பெயர்களும் கூடச் சமஸ்கிருதப் பெயர்களாகவே உள்ளன.
எங்கள் மக்களிடையே பண்டைய இந்திய நாகரிகத்தின் தாக்கம் வலிமையாக உள்ளது. இது நமது ஜெனிடிக்ஸ் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும் வறுமையை ஒழிப்பதில் மோடி காட்டி வரும் அர்ப்பணிப்பையும் அதிபர் சுபியாண்டோ பாராட்டினார். இந்தச் சில நாட்களில் பிரதமர் மோடியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் அதிபர் சுபியாண்டோ குறிப்பிட்டார்.
பெருமைப்படுகிறேன்:
தொடர்ந்து பேசிய அதிபர் சுபியாண்டோ, “நான் இங்கே (இந்தியாவில்) இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்… நான் 24 மணி நேரமும் அரசியல் செய்யும் நபர் இல்லை. நான் ராஜதந்திரியும் இல்லை.
நான் என் மனதில் உள்ளதைச் சொல்கிறேன். நான் இந்தச் சில நாட்களில் பிரதமர் மோடியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சமூகத்தில் நலிவடைந்தோருக்கு உதவுவதிலும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது” என்றார்.
