பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

Advertisements

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

Advertisements

இதையடுத்து, பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *