
Narendra Modi | Madhya Pradesh | Inaugurate
ரூ. 4,000 கோடி மதிப்பிலான ரெயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாடினார்…
போபால்:பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி, இன்று மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி ரூ.4,000 கோடி மதிப்பிலான ரெயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாடினார்.
சுமார் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா – பினா ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் மோரி-கோரி-விதிஷா-ஹினாட்டியா 4 வழிச்சாலை, ஹினாட்டியா-மெலுவா இருவழிச்சாலையென ரூ.1,580 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

