Sanatana Dharma : சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சியில் புதிய அணி துவக்கம் – பவன் கல்யாண்!

Advertisements

சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சியில் புதிய அணி துவக்கம் – பவன் கல்யாண்!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சியில் ‘நரசிம்மா வாராஹி படை’ (narasimha varahi ganam) என்ற புதிய அணியைத் தொடங்கினார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

“சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை. சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்.”

“நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்றும் தெரிவித்தார்!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *