
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மிக சிறப்பானது என்று பிரதமர் மோடி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, லோக்சபாவில் நடந்த விவாதத்தில், உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு, உள்துறை நடவடிக்கைகள், மத்திய அரசின் சாதனைகளை விளக்கியதுடன், எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
இதையடுத்து, அவரது இந்த உரையை, பிரதமர் மோடி பாராட்டுக்கள் தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பதிவில், அமித் ஷாவின் பேச்சு மிக சிறப்பானது என்றும் தேசிய நலனுக்கான முக்கியமான அம்சங்களை திறம்பட எடுத்துரைத்துள்ளதாகக் கூறினார்.
இதை தொடர்ந்து, மத்திய அரசின் நிலைப்பாட்டை, தெளிவாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உண்மைகளை துல்லியமாக சுட்டிக் காட்டிய உரை இருந்தாதாகக் கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குப் பிரதமர் மோடி பாராட்டுக்கள் தெரிவித்தார்.





