பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசிம் முனீர் எச்சரிக்கை.!

Advertisements

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் விரைவில் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் , மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இருதரப்பு மோதல் முடிவுற்றது. இதனையடுத்து, பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில், பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டார். அப்போது இந்தியாவுடனான மோதல் குறித்து பேசியபோது, அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை என்றும் அதேசமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *