பாக்: சிறையில் இம்ரான்கான் படுகொலை: பிணத்தை மறைத்த ராணுவம்!

Advertisements
பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவரது பிணத்தை அங்கிருந்த ராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து அப்புறப்படுத்தி விட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன .இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான் கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்ற பிறகு தெஹ்ரிக் – இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் அமோக வெற்றி பெற்றார் . இதன் மூலம் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றார் இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் இம்ரான் காலின் ஆட்சி கவிழ்ந்தது.
இதைத் தொடர்ந்து இம்ரான் கான் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் எழுந்தன. பதவி காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் அதனை விற்று தனது சொந்தமாக்கி கொண்டதாக ஒரு புகார்எழுந்தது.இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டார் என்றும் ஒரு வழக்கு இம்ரான் கான் மீது தொடரப்பட்டது இது குறித்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது அதன்படி இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ள அடிபாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அடிபாலா சிறைச்சாலை என்பது ராலல் பிண்டியில் உள்ளது.சிறையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில்,இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது இதன் பேரில் இம்ரான் கானின் சகோதரிகள் மூன்று பேர் சிறைக்கு வந்தனர் ஆனால் இம்ரான் காரனை சந்திக்க அவர்களுக்கு போலீசாரும் சிறை நிர்வாகத்தினத்தினரும் அனுமதி தரவில்லை.இதனால் அவர்களும் இம்ரான் கான் கட்சி தொண்டர்களும் ஏராளமான பேர் திரண்டு சிறைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து இம்ரான் கானின் தங்கை கூறும் பொழுது அண்ணன் இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று தான் சிறைக்குச் சென்றோம் நாங்கள் அமைதியான முறையில் தான் சிறைக்கு வெளியே போராடினோம் எங்கள் அண்ணன் உடல்நிலை பற்றி கவலையாக இருக்கிறது. திடீரென அங்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பஞ்சாப் மாகாண போலீசார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர் எனக்கு 71 வயதாகிறது எனது தலை முடியை பிடித்து சாலையில் தர தரவென இழுத்துச் சென்று தரையில் தள்ளினார்கள் இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சிறைக்குள் இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியே கசிந்தது அதாவது அடிபாலா சிறைக்குள் கைதியாக இருந்த இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துவிட்டது அவரது பிணத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள் என தகவல் பரவியது .இம்ரான் கான் அங்குள்ள காவல் துறையினரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து செய்திகள் பரவின.இதனைத் தொடர்ந்து இம்ரான் கான் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் பெருமளவில் சிறைக்கு முன்பாக திரண்டார்கள் இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று அவர்கள் சிறை வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார்கள் இதை அடுத்து அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இம்ரான் கான் கட்சியினர் தொடர்ந்து இரவு பகலாக சிறை வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷல்களையும் அவர்கள் எழுப்பி வருகிறார்கள்.இதற்கிடையே இம்ரான் கான் கொலை செய்யப்பட்டது உறுதியான தகவல் தான் என அங்குள்ள ஆப்கண் டைம்ஸ் என்ற பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது.இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக இம்ரான் காண யாரும் சந்திக்க அனுமதி தரவில்லை இதனால் சந்தேகம் மேலும் வலுத்து உள்ளது.இந்த நிலையில் இம்ரான் கான் ஒரு ஸ்ட்ரக்சரில் படுத்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது இம்ரான் கான் உயிரிழந்தது குறித்து சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை.இந்த நிகழ்வு குறித்து உலகம் முழுவதும் தகவல் பரவிய நிலையில் மிகப்பெரிய அளவில்  பதட்டம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *