
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கரூர் சம்பவம் தொடர்பாக கேட்டபோது , தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசியதில் , “விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார்.
இதற்கு நான் தான் பொறுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்றால் என் மீது எடுங்கள். என்னை நம்பிவந்தவர்களையும், உடன்வந்தவர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று தானே பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் சினிமா பட வசனம் போல் பேசியுள்ளார்.
இது நல்ல அணுகுமுறை அல்ல. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது.
அவர் அப்படி பேசுவதை பார்க்கும்போது, அந்த இறப்பைவிட வலி அதிகமாக இருக்கிறது. எத்தனையோ சினிமா நடிகர்கள் கட்சி துவங்கியுள்ளனர். ஆனால், இதுபோல் பசி பட்டினியோடு நின்றது, மயக்கம் அடைவது போன்ற நிகழ்வுகள் நடந்ததில்லை.
இனி வரும் காலங்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்பது, ஊர் ஊராக சென்று கூட்டம்போடுவது எனும் நடைமுறையை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
