Nithya Menen: மலையாள நடிகருடன் திருமணம்!

Advertisements

பிரபல நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு வெளியான 180 என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நித்யா மேனன். அதனைத் தொடர்ந்து வெப்பம் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில், இவருடைய திருமணம்குறித்த தகவல்களை இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இணையத்தில் வைரலாகும் தகவலின் படி தன்னுடைய பள்ளிக்கால நண்பரும், தற்பொழுது மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகருமான ஒருவரை நடிகர் நித்தியாமேனன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்குத் திருமணம் என்றால் நானே அறிவிப்பேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியிருந்தார். இந்நிலையில், இவரது திருமணம்குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *