N. Chandrababu Naidu Arrest: திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!

Advertisements

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திராவில் பதற்றம்! திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்…

சென்னை: ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக-ஆந்திர மாநிலத்திற்கு இடையே பஸ் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரு மாநில பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மாதவரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திருப்பதிக்கு பஸ்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றன. ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் 60 பஸ்களும் தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வரை இயக்கப்படுகிறது. அதேபோல் ஆரம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு மாதவரத்திற்கு திரும்பி வருகிறது. ஆந்திர மாநிலத்திற்குள் செல்லவில்லை. ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாதவரத்திலிருந்து 140 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. இந்தப் பஸ்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பஸ் நிலையத்திலும் ஆந்திர மாநிலத்திலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

இரு மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மாதவரம் பஸ் நிலையத்தில் திருப்பதி, நெல்லூர், காளஹஸ்தி செல்லக்கூடிய பயணிகள் பஸ்கள் ஓடாததால் தவிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், “ஆந்திரா மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால் மாதவரத்திலிருந்து ஆரம்பாக்கம் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கு நிலைமை சீராகும் வரை இதே நிலை நீடிக்கும்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *