
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் அடுக்குமாடிக் கட்டடங்கள் சாய்ந்தன. நிலநடுக்கம் நிலத்தடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கித் தவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



