
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மும்மொழிக் கொள்கைத் திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது, இருமொழிக் கொள்கை விவகாரத்தில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தங்கள் மொழியுணர்வை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் கல்விக்கு உரிய நிதியைத் தராவிட்டாலும் இனமானத்தை அடகுவைக்க மாட்டோம் என்றும், இது பணப் பிரச்சனை இல்லை இனப் பிரச்சனை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


