
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணம் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய தனது பயணம்,இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய்த் தன்னைக் கவனித்துக் கொண்ட வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


