MK Stalin:10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.கத்தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை!

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-* அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ஆட்சிக்கு வந்தவுடன் துறைவாரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டு 2.29 லட்சம் மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

* கொளத்தூர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதியும் என்னுடையது என்ற நோக்கில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்.

* புகார் பெட்டியில் பெற்ற மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குத் தீர்வு காணப்படும் எனக் கூறினேன்.

* எங்களைக் கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.

* தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* ஆட்சிக்கு முன் மட்டுமல்ல, ஆட்சிக்குப் பின்னரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலம் மனு பெற்றோம்.

* முதல்வரின் முகவரியின் கீழ் பெற்ற 68 லட்சம் மனுக்களில் 66 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

* மக்களின் கோரிக்கை எங்கள் பார்வையிலிருந்து தவறக் கூடாது என்று செயல்பட்டோம்.

* தர்மபுரி மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள்மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

* அரசு திட்டங்களின் பயன்கள்குறித்து மக்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு அரசுத் திட்டம் பயன்படுகிறது.

* ரூ.51 கோடி செலவில் அரூர் அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

* தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில், ரூ.38 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

* தீர்த்தமலையில் துணை விரிவாக்க வேளாண் மையம் அமைக்கப்படும்.

* பாளையம்புதூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

* பேரூராட்சியாக உள்ள அரூர் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும்.

* மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தி தருகிறோம்.

* மக்களுடன் முதல்வர்.. யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

* தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசுப் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

* 10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.கத்தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *